மைலான் நிறுவனத்தில், நாங்கள் “விதிகளைக் கொண்டு" மட்டுமே வியாபாரம் செய்வதில்லை. எமது நிறுவனத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஒவ்வொரு பணியாளரும், மிக உயர்ந்த அளவு நன்னெறித் தரநிலைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன் பொருள், எது எளிதோ அதைச் செய்வதற்குப் பதிலாக எது சரியானதோ அதைச் செய்வது என்பதேயாகும். அதற்கு, நாணயத்தோடு செயல்பட்டு, நமது மதிப்புகளை உயர்த்திப் பிடித்துக் கொள்வது என்றே எப்போதும் அர்த்தமாகிறது. அந்த முயற்சியின் ஓர் முக்கியமான பகுதியே, அனைத்துப் பணியாளர்களும் முறையற்ற செயல்பாடு எதுவும் நடைபெறுகிறதா எனக் கண்காணிப்பாயிருந்து, அதனை நிர்வாகத்திற்கு அறிவிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதேயாகும்.

உங்கள் கவலைகளைத் தெரிவிப்பதற்கு மைலான் நிறுவனம் பல்வேறு விதமான வசதி வாய்ப்புகளை வழங்குகிறது, அவை: ஆன்லைன் அல்லது தொலைபேசி, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக. இணக்கத் தொலைபேசி வசதி, வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் அணுகக் கூடியதாக இருக்கிறது மேலும், நீங்கள் விரும்பினால், அநாமதேயமாகவும் நீங்கள் ஓர் அறிவிப்பைச் செய்யலாம். நீங்கள் தெரிவிக்கும் எந்தவொரு தகவலும் இரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் என்பதை தயவுசெய்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள பணியாளர்கள் இணக்கம் குறித்த தகவல்களை அறிவிப்பதற்கு ஆன்லைன் வசதி வாய்ப்பை உபயோகித்துக் கொள்ள முடியாது.

இணக்கத் தொலைபேசி எண்

வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும்
தொலைபேசி வாயிலாக
இங்கே சொடுக்குக
மின்னஞ்சல் வாயிலாக

ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியம்
europe.compliance@mylan.com

மற்ற அனைத்து பிராந்தியங்கள்
compliance@mylan.com

அஞ்சல் வாயிலாக

NAVEX Global
(மைலான் ஐஎன்சி நிறுவன கவனத்திற்கு)
333 Research Court
Norcross, GA 30092 USA

இணக்கத் தொலைபேசி இணைப்பு, ஓர் மூன்றாம் தரப்பு வியாபார நிறுவனத்தால் இயக்கப்பட்டு, உலகளாவிய இணக்க அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளது.

நீங்கள் இணக்கத் தொலைபேசியில் அழைக்க அல்லது ஆன்லைனில் அறிவிப்பதற்குத் தேர்ந்தெடுக்கிற பட்சத்தில்:

  • உங்கள் பெயரைச் சொல்லுமாறு உங்களிடம் கேட்கப்படும், அது மிகவும் இரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். நீங்கள் உங்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை என்றால், நீங்கள் விஷயங்களை அநாமதேயமாகவும் அறிவிக்கலாம். உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது மேலும் உங்கள் ஐபீ முகவரியும் பதிவு செய்து பின் தொடரப்படாது.
  • நேர்காணல் செய்யும் நிபுணர், உங்கள் விஷயத்திற்கு ஒரு அறிக்கை எண்ணை ஒதுக்கீடு செய்து, அதனை ஆவணப்படுத்திக் கொள்வார் அல்லது நீங்கள் ஆன்லைனில் அறிவிக்க விரும்பினால், தயவுசெய்து எவ்வளவு விபரங்களை வழங்க முடியுமோ அவ்வளவு விபரங்களை வழங்குங்கள்.
  • உங்கள் விஷயம், நிறுவனத்தில் உள்ள மிகவும் ஏற்றதோர் மைலான் நிறுவன நபர் மறுஆய்வு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நீங்கள் அறிவித்தது குறித்ததோர் பதிலைப் பெற்றுக் கொள்வதற்கு, கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு அல்லது நிறுவனத்திற்கு இருக்கக் கூடிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, பின்னொரு தேதியில் நீங்கள் தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது ஆன்லைனில் சோதித்துப் பார்க்கலாம்.
  • இணக்கத் தொலைபேசிக்கு, நன்னம்பிக்கையின் அடிப்படையில் செய்த அழைப்புகள் எதற்கும், பிற்பாடு அந்த யதார்த்தங்கள் துல்லியமற்றவை அல்லது முடிவு செய்ய முடியாதவை எனக் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அவற்றுக்காகப் பழி வாங்கப்படுவதற்கு எதிரான கடுமையான கொள்கை ‏எமது நிறுவனத்திற்கு உள்ளது.
  • இணக்கத் தொலைபேசியைத் தவறாக உபயோகிப்பது, அழைத்தவரை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படச் செய்து விடலாம்.

இணக்கச் சேவை, தி நெட்வொர்க் என்றதோர் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் மேலாண்மை செய்யப்பட்டு, வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கிடைக்கிறது. தி நெட்வொர்க் நிறுவனம், உங்கள் கவலையை ஆவணப்படுத்தி, அத்தகவல்களை மைலான் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும்அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்
இங்கே சொடுக்குக
இணக்க அலுவலர்கள்
இங்கே சொடுக்குக